வருகை பதிவு
  • பல்கலைக் கழகத் தேர்வுகள் எழுே முழுத் தகுதி பெற ஒவ்வொரு மாணவ / மாணவியரும் சேர்க்கை / மறுசேர்க்கை பெறப்பட்ட நாளிலிருந்தும் ஒவ்வொரு பருவத்திற்கும் குறைந்தது 75 % மேல் வருகை பதிவு பெற்றிருக்கவேண்டும்
  • சேர்க்கை / மறுசேர்க்கை பெறப்பட்ட நாளிலிருந்து 65 % மேல் மற்றும் 75 % கீழ் வருகை பதிவு உள்ள ஒவ்வொரு மாணவ / மாணவியரும் பல்கலைக் கழகத்தில் நிர்ணயிக்கப்பட்ட அபராத தொகையை செலுத்தி தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
  • அபராத தொகை மற்றும் அதனுடன் ஏதேனும் தண்ட தொகை விதிக்கப்பட்டிருந்து , அவற்லை செலுத்த தவறும் ஒவ்வொரு மாணவ / மாணவியரும் தேர்வு எழுே அனுமதிக்கப்படமாட்டார்கள் மேலும் மாணவ / மாணவியர் அடுத்த பருவத்திற்கான சேர்க்கை பெரும் தகுதியையும் இழந்தவராவார்
  • சேர்க்கை / மறுசேர்க்கை பெறப்பட்ட நாளிலிருந்து 66 % கீழாக வருகை பதிவு உள்ள மாணவ / மாணவியர் , பல்கலைக் கழகத் தேர்வுகள் எழுே அனுமதிக்கப்படமாட்டார்கள் . மேலும் மாணவ / மாணவியர் அடுத்த பருவத்லே மீண்டும் அடுத்த ஆண்டில் குறிப்பிட்ட தொகை செலுத்தி சட்டக் கல்வி இயக்குநரின் உரிய அனுமதியோடு மட்டுமே தொடரமுடியும் முடியும்.
  • முதல் முறையாக தோன்றும் விண்ணப்பதாரர்கள் முழு (ஆண்டு இறுதி/செமஸ்டர் ) தேர்வுக்கொன கட்டணத்தை செலுத்த வேவண்டும்.
  • பார்வையற்ற விண்ணப்பதாரர்கள் : பார்வையற்ற விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது . அவர்கள் தங்கள் ஊனத்திற்கொன சான்றாக மருத்துவச் சான்றிதழின் நகலை இணைக்கவேண்டும். விண்ணப்ப படிவத்தின் 2வது நெடுவரிசையில் , ‘பார்வையற்ற வேட்ப்பாளர் ‘ என எழுதவும் . இருப்பினும், அவர்கள் மதிப்பெண் அறிக்கை , தற்காலிக சான்றிதழ் மற்றும் பட்டமளிப்புக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்
  • விண்ணப்பதாரர்கள் தங்களுக்குரிய அடையாள சான்றிதழை சமர்ப்பித்து, தேர்வு தொடங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக கல்லூரியில் (தேர்வு  மையம் ) ஹால் டிக்கெட்டுகளை பெறவேண்டும் .
இடைநிறுத்தம்

தனது படிப்பை இடைநிறுத்தம் செய்த ஒவ்வொரு மாணவ / மாணவியரும் அவ்வவாறு இடைநிறுத்தம் செய்த கல்வியாண்டிலிருந்து ஐந்து கல்வியாண்டுகள் குறிப்பிட்ட தொகை செலுத்தி சட்டக் கல்வி இயக்குநரின் உரிய அனுமதி பெற்று குறிப்பிட்ட கல்வியாண்டை தொடர முடியும். அவ்வொறு செய்ய தவறும் நிலையில் பல்கலைக்கழகத்துடன் இணைந்த எந்த ஒரு அரசு சட்டக் கல்லூரியிலும் சேர்வதுக்கான தனது உரிமையை இழக்கிறார் .

தேர்ச்சி மதிப்பபண்
  • ஒவ்வொரு மாணவ / மாணவியரும் அகமதிப்பீடு மற்றும் புற மதிப்பீடு தேர்வுகளில் தனித்தனியாக குறைந்த அளவாக 45% மதிப்பெண்கள் பெற்றிருந்தால் தான் தேர்ச்சி பெற்றதாக கருத முடியும். அகமதிப்பீடு தேர்வுக்கு தேர்ச்சி பெற 30% மதிப்பபண்களுக்கு 45% விழுக்காடான 13.4 (14 என முழுமையாக்கப்பட்டது ) மதிப்பெண்களும் , வெளி மதிப்பீட்டு தேர்வுக்கு 70 மதிப்பெண்களுக்கு 45 சதவீதமோ 31.5 (32 என முழுமையாக்கப்பட்டது ) பெற்றிருக்க வேண்டும் .
  • மேற்சொன்னவொறு அக மற்றும் புற மதிப்பீட்டில் மதிப்பெண் எடுக்கத் தவறும் மாணவ / மாணவியர் அத்தேர்வில் தேர்ச்சி பெறாதவராக அறிவிக்கப்படுவர்.
  • ஏதேனும் ஒரு மாணவ மாணவி உள் மதிப்பீட்டில் தேர்ச்சி பெற்றிருந்து வெளி மதிப்பீட்டில் தோல்வி அடைந்திருந்தால் அவர் அத்தேர்வில் தேர்ச்சி பெறாதவராகவே கருதப்படுவர் . ஆயினும் அந்த உள் மதிப்பீட்டு மதிப்பெண் அடுத்த தேர்விற்கு எடுத்துக் கொள்ளப்படும்.
  • ஒவ்வொரு மாணவ / மாணவியரும் ஒவ்வொரு பாடத்திற்குமான உள் மதிப்பீட்டிற்கான அணைத்து அம்சங்களையும் நிறைவேற்றி இருக்க வேண்டும் . மேலும் வருகைப்பதிவேடு தொடர்பான தேவைகளையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும் .
  • உள் மதிப்பீட்டிற்கு தேவையான அணைத்து அம்சங்களா கிய இடைநிலை தேர்வு, வாய்மொழி தேர்வு, விளக்கவுரை அளித்தல் மற்றும் பயிற்சி வகுப்பீடு பூர்த்தி செய்த மாணவ / மாணவியர் போதிய வருகை பதிவேடு மதிப்பெண்கள் பெற தவறினால் அவர் அப்பாடத்தில் வராதவராகவே கருதப்படுவர் .
  • ஒரு மாணவர் குறிப்பிட்ட உள் மதிப்பீட்டுக் கூறுகளில் பங்கேற்று , 45 % மதிப்பெண்களை பெற்று , சில உள் மதிப்பீட்டுக் கூறுகள், அதாவது , இடைநிலை தேர்வு, வாய்மொழி தேர்வு, விளக்கவுரை அளித்தல் மற்றும் பயிற்சி வகுப்பீடு இதில் ஏதேனும் ஒன்றில் கலந்து கொள்ள தவறினால் , அவர் குறைந்தபட்ச தேர்ச்சி பெற்றிருந்தாலும் , அந்த பாடத்தில் “தேர்வுக்கு வராதவர் ” (Absent) எனக் கருதப்படுவார் . ஒரு மாணவர் அணைத்து உள் மதிப்பீட்டுக்
    கூறுகளிலும் பங்கேற்கவேண்டும் மற்றும் உள் மதிப்பீட்டில் குறைந்த பட்ச தேர்ச்சி பெற வருகை அளவுகோல்களை பூர்த்தி செய்ய வேண்டும் .
  • உள் மற்றும் வெளி மதிப்பீட்டு தேர்வுகளில் முழுமையாக தேர்ச்சி பெற்றதை வைத்துதான் தேர்ச்சி ஆண்டு மற்றும் மாதம் அமையும்
  • தேர்ச்சி பெற்ற மாணவ / மாணவியர் கீழ்க்கண்வாறு வகைப்படுத்தப்படுவர்

60 % வீதம் அதற்க்கு மேல் -மேல் வகுப்பு
50 % வீதம் மேல் 59 % வீதம் வரை – இரண்டாம் வகுப்பு
45 % வீதம் மேல் 49 % வீதம் வரை -மூன்றாம் வகுப்பு

மறுமதிப்பீடு

மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கான விண்ணப்பம், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குள், அந்தந்த கல்லூரி முதல்வர் மூலம் , நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்துடன், பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் .

விடைத்தாளின் புகைப்பட நகல்

விடைத்தாள் புகைப்பட நகலை பெறுவதற்கு தேவையான கட்டணத்தை செலுத்தி தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக் கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாளர்களுக்கு நமது கல்லூரி முதல்வர் மூலம் விண்ணப்பித்துப் பெறலாம் .

ஒருங்கிணைந்த மதிப்பெண் அறிக்கை

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக் கழகத்தில் எல்.எல்.பி., (3/5 ஆண்டுகள்) முழுப் பட்டத்தையும் வெற்றிகரமாக முடித்த நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் , தேர்ச்சி பெற்றவிண்ணப்பித்தார்களுக்கு இந்தியன் வங்கி சலனுடன் ரூ.525/-க்கான விண்ணப்பத்தைசமர்ப்பித்தல் , ஒருங்கிணைந்த மதிப்பெண் அறிக்கை வழங்கப்படும். ரூ.500 மற்றும் விண்ணப்பச் செலவு ரூ.25) முழுப் பட்டத்தையும் வெற்றிகரமாக முடித்த நாளிலிருந்து ஆறு
மாதங்களுக்குள் .

கட்டண விவரங்கள் இளங்கலை
தேர்வு விண்ணப்பப் படிவத்திற்கு 25.00
ஒவ்வொரு எழுதப்பட்ட /நடைமுறை பாடத்தாள் 65.00
மதிப்பெண் அறிக்கைக்கு 50.00
அபராத கட்டணத்திற்கு 50.00
தற்காலிக சான்றிதழ் விண்ணப்பப் படிவத்திற்கு 25.00
தற்காலிக சான்றிதலுக்காக 150.00
பட்டமளிப்பு படிவத்திற்கு 25.00
பட்டமளிப்பு கட்டணத்திற்கு 400.00
தட்கல் கட்டணம் (யுஜி தேர்வு மட்டும்) 500.00
ஒவ்வொரு பாடத்தாளுக்கும் மறு மதிப்பீடு 400.00
ஒவ்வொரு பாடத்தாளுக்கும் மறுகூட்டல் 200.00