PRINCIPAL’S MESSAGE

Dr. J. JAMES JAYAPAUL M.A.,M.L.,D.L.A.L., Ph.D.,

பேராசிரியை. முனைவர். ஜெ. விஜயலெட்சுமி ( சட்டக் கல்வி இயக்குநர் ) அவர்களால் ஆகஸ்ட்-22, 2022 அன்று அரசு சட்டக் கல்லூரி இராமநாதபுரத்தில் முதல்வர் முழுக் கூடுதல் பொறுப்பினை ஏற்றுக் கொண்டேன் .இந்த கல்லூரி வளாகமானது ஒரு நல்ல கிராம சூழ்நிலை கொண்ட இடமாகும் தற்காலிகமாக இக்கல்லூரியானது அரசு பள்ளிக் கட்டிடத்தில் இயங்கி வந்தாலும் தக்கோட்டை பஞ்சாயத்தில் புதியக்கட்டிட பணியானது விரைவாக நடந்து கொண்டிருக்கிறது

எங்கள் கல்லூரியில் 3 வருட எல்.எல்.பி., சட்டப்படிப்பு 5 வருட பி.ஏ.எல்.எல்.பி,. சட்டப்படிப்பு மற்றும் அரசியலமைப்பு சட்டம், நிர்வாக சட்டம் ஆகிய பிரிவுகளில் எல்.எல்.எம்., சட்டப் படிப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சுமார் 600 மாணவர்களுக்கு மேற்படி சட்டப்படிப்பினை போதித்து வருகிறோம். இந்த சட்ட துறையில் மாணவர்களை சிறப்பாக கொண்டு வருவதற்கு உதவிப் பேராசிரியர்கள் மற்றும் கொளரவ விரிவுரையாளர்கள் கடுமையாக முயற்சி செய்து வருகின்றார்கள். மாணவர்களின் தனிப்பட்ட திறமைகளை மேம்படுத்துவதிலும் மாதிரி நீதிமன்றத்தில் பங்கேற்பதற்கு ஏதுவாக சிறப்பு பயிற்சி வகுப்புகளும் ஒவ்வொரு வாரமும் நடத்தப்பட்டு வருகிறது. இராமநாதபுரம் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி அவர்கள் மாணவர்களின் நீதி மன்ற நடைமுறைகளை புரிந்து கொள்வதற்கு ஏதுவாக மாணவர்களுக்கு நீதி மன்றத்திற்குள் கவனிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளார். இதன் மூலம் மாணவர்களை நீதிமன்ற நடைமுறைகளை தேர்ச்சி ற்றவர்களாக விளங்குகின்றனர். கடந்த ஆண்டு நடந்த கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டியில் எங்கள் கல்லூரி மாணவர்கள் ஈட்டி எரிதல் போட்டியிலும், குண்டு எரிதல் போட்டியிலும் தங்கம் பதக்கம் வென்றுள்ளனர் என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறோம்.

மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களால் துவக்கப்பட்ட மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி திட்டத்தில் எங்கள் கல்லூரியை சார்ந்த 23 மாணவிகள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தகுதியானவர்களாக உள்ளனர். எங்கள் கல்லூரி நூலகமானது மாணவர்களின் வாசிப்பு திறன் மற்றும் கற்கும் திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு சட்ட இதழ்கள் மற்றும் சட்ட புத்தகம் மூலமாக செயல்பட்டு வருகின்றது. மாண்புமிகு உயர்நீதி மன்ற தீர்ப்புகளின் தமிழ் மொழியாக்கம் செய்யப்பட்ட புத்தகங்களும் எங்கள் நூலகத்தில் உள்ளது.

சட்டப் படிப்பு படிக்கின்ற மாணவர்களின் அறிவை மேம்படுத்தும் வழியில் உருவாகி வரும் சட்டப் பிரச்சினைகளின் தலைப்பில் சிறப்பு சட்ட சொற்பொழிவானது நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்களின் உன்னதமான நோக்கங்கள் வெற்றியடைய நல்வாழ்த்துகளை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Latest News

Right to Vote: Awareness and Enrollment

2nd Counselling Cut off Marks – Click here to view

Dear candidates, LL.M cut off marks is published in https://admission.tndls.ac.in website. You can modify your preference of branch and college on or before 14-10-2023 using your registered login.
Click here to view – Cut off


Permitted to write the exam on the lines of UGC guidelines of uniform span period (N+2) – Directions issued by Registrar, TNDALU
Click here to view details

LL.M – 2022-2023- 2nd Counselling Cut off Mark
Click here to view details

RANK LIST – ADMISSION 2022-2023
Rank List for  LL.M. Degree course :  2022-2023
Click here to view details ADMISSION NOTIFICATION 2022-2023   The LLM candidates can modify their preference of branch and college on or before 06/11/2022 for LLM admission 2022-2023…! Click here to login
© Copyright - Government Law College Ramanathapuram
Skip to content